Tuesday, November 21, 2017

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

சபரிமலை பெரிய பாதையின் மஹத்துவம் !!!
***********************************************
சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.

பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரியாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.

ஸாக்ஷாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் கூட மஹத்துவம் உண்டு. பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்த்ரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது.

ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)

1. எருமேலி
2. பேரூர் தோடு
3. காளைகட்டி
4. அழுதை
5. அழுதை நதி
6.கல்லிடுங்குன்னு
7.இஞ்சிப்பாறை - உடும்பாறை
8.முக்குழி
9.கரிவலாம் தோடு
10. கரிமலை
11. வலியானை வட்டம்
12.செரியானை வட்டம்
13. பம்பா நதி

ஒவ்வொரு கேந்த்ரத்தின் முக்கியத்துவத்தையும் காண்போம் :

1. எருமேலி

அத்தனை பக்தர்களும் கூடும் இடம் எருமேலி. மஹிஷியை கொன்று வீசிய இடம் - மஹிஷிமாரிகா வனம் என்ற பண்டைய புராணங்கள் போற்றும் இடம். பின்னர் எருமைக்கொல்லியாகி எருமேலியாகி உள்ளது. முதலில் பேட்டை சாஸ்தாவை வணங்க வேண்டும். ஐயப்பன் போருக்கு வனம் புகுந்ததை நினைவு படுத்தும் முகமாக பேட்டை துள்ளல் நடைபெறுகிறது.

எருமேலியில் மேற்கு பகுதியில் கிராத ரூபத்தில் சாஸ்தா ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இங்கு  கிராத சாஸ்தாவை த்யானித்து,  அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவக்க வேண்டும்.

அதன் முன்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தக்ஷிணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்ட வேண்டும்.

மசூதிக்கு சென்று வணங்கும் வழக்கம் பண்டைய வழக்கம் இல்லை. (முன்பிருந்த வாபுரக் கோஷ்டமும் இப்போது காணப்படவில்லை... எனவே) கோட்டைப்படியில் மஹாகணபதியையும் பேட்டை சாஸ்தாவின் ஆலயத்திலேயே சிவபூதமான வாபுரனையும் மானசீகமாக வணங்கி வனத்துள் செல்ல வேண்டும்.

2. பேரூர் தோடு

தோடு என்றால் நீர்நிலை. பெரியபாதையின் முதல் தாவளம் - தங்குமிடமும் இதுதான். இங்கிருந்து தான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் துவங்குகிறது. முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.

பண்டைய காலத்தில் வெளிச்சப்பாடின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரியபாதைக்குள் நுழைய முடியும்.  கொட்டாரக்கரை ஹரிஹரய்யர் காலத்துக்கு முன்பு வரை, வெளிச்சப்பாடு விபூதி ப்ரஸாதம் தந்தால் மேற்கொண்டு யாத்திரையை தொடரலாம். அல்லாமல் அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டாரானால் வீட்டுக்கு திரும்பி விட வேண்டியது தான்.

யாத்திரைக்கு அனுமதியில்லாத பக்தர்கள் யாத்திரைக்கு வரும் ஐயப்பன்மார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடைபெறுவர்.

வனதேவதைகளும், பூதகணங்களும், வன்மிருகங்களும் - இந்த விரத மகிமைக்கு மட்டுமே கட்டுப்பட்டு பக்தரை தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்கள்.

3. காளைகட்டி

காளைகட்டி ஆஸ்ரமம் என்றே இந்த இடத்துக்குப் பெயர். பலரும் சிவபெருமான் நந்தியைக் கட்டி வைத்த இடம் என்று கூறுவதுண்டு; ஆனால் அது சரியல்ல; (நந்தியென்ற உயர் சிவ கணத்தை கட்டி வைக்க வேண்டுமா? ஓடிப்போக அவர் என்ன நம் வீட்டு காளையா?)

உண்மை என்னவென்றால், இந்த இடத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேச்வரன்; சைவ தர்ம சுரக்ஷிதனான சாஸ்தாவின் கணங்களில் அவரும் ஒருவர். எனவே அவரை வணங்கி அவரது அனுமதியுடன் யாத்திரையை தொடர வேண்டும்.

4, 5. அழுதையும் அழுதை நதியும்

”பந்தள பூபபாலன் கருணா வருணாலயன் அலஸையில் விலஸும் ஈசன்” என்று ஐயப்பன் போற்றப்படுகிறான். அலஸா என்று அழைக்கப்பட்ட நதியே இன்றைய அழுதை நதி.

பம்பையின் ஒரு கிளை நதியான அழுதையில் ஸ்நாநம் செய்து அழுதை மலையை ஏறிக் கடக்க வேண்டும். அழுதையில் முழுகிக் கல்லை எடுத்துக் கொண்டு மடியில் காப்பாற்றி வைப்பது வழக்கம்.

அழுதை ஸ்னானம் செய்து இருமுடியை தலையில் வைக்கும் முன்பு குருநாதரை வணங்கி தக்ஷிணை கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும்.

6. கல்லிடும்குன்னு

கல்- இடும் - குன்னு என்றால் கல்லை இடும் குன்று. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இது தான். அழுதா மலையை ஏறி முடித்த பின்னர் மேட்டுப் பகுதியில் கற்களை விடுக்கிறார்கள். நன்மைக்கும் தீமைக்குமான நெடும் போராட்டத்தில் நம்மாலான பங்காக தீமையை அழிக்க ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது.

பண்டைய காலங்களில் ஆத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவர்கள் இங்கு சிறப்பாக பூஜைகள் நடத்தி லீலாவதிக்கு ஆராதனை செய்யும் வழக்கம் இருந்தது. (இப்போது அப்படி எதுவும் நடப்பதில்லை)

7. உடும்பாறை இஞ்சிப்பாறை

அழுதாமேட்டை தாண்டி வடக்குப்பக்கம் சென்றால் வருவது உடும்பாறைக் கோட்டை. இங்கு சிலர் இரவில் தங்குவதும் உண்டு. இங்கு ஸ்ரீ பூதநாதரின் ஸாந்நித்யம் நிலை பெற்றிருப்பது கண்கூடு. ஸமஸ்த பூத கணங்கள் சூழ இங்கு அவர் வ்யாக்ரபாதன் என்ற பெயரில் இங்கு வசிக்கிறார். இரவு நேரங்களில் பூதத்தானின் சங்கிலி சத்தமும் கேட்பதுண்டு.

ஸ்ரீபூதநாதருக்கென விசேஷமான ஓர் பாறையும் அங்கே பகவானுக்கென விசேஷமாக ஆழி பூஜையும் நடத்துவது மரபு. இந்த ஆழியின் சாம்பலே ப்ரசாதமாக வழங்கப்பட்டது (மரங்களையும் தேங்காயையும் கொண்டே ஆழி நடத்துவது பண்டைய வழக்கம் இது பொதுவாகக் காணப்படும் கற்பூர ஆழியிலிருந்து மாறுபட்டது.) பார்வதீபுரம் வெங்கடீச்வர ஐயர் காலம் வரை தடங்கலின்றி நடைபெற்ற ஆழி பின்னர் பல காரணங்களால் தடைபட்டு பூதப்பாண்டி ஸ்ரீ ராமநாத வாத்யாரின் காலத்தில் வலியானைவட்டத்தில் தொடர்கிறது.

(பெரியபாதையை பெரிதும் மாற்றி அமைத்த காரணத்தால் சென்றமுறை வழக்கமான  பாறையையும் காண முடியவில்லை)

இங்கே பூதநாதரை வணங்கி பானகம் நைவேத்யம் செய்வது வழக்கம்.

இங்கிருந்து சற்றே அருகில் அமைந்திருப்பது இஞ்சிப்பாறைக் கோட்டை. இங்கு சாந்நித்யம் கொண்டிருப்பது தேவி. (த்வரிதா தேவி என்றும் கொள்வதுண்டு)

8 முக்குழி

இறக்கத்தின் முடிவாக வந்து சேரும் இடம் முக்குழி. சிலர் அழுதை மலை ஏறாமலே அரையக்குடி வழியாக சுற்றி முக்குழி வந்து சேர்வதும் உண்டு. (கல்லிடும்குன்னும், உடும்பாறையும் காணாத காரணத்தால் இது இரண்டாம் பட்சமே என்று கூறுவோரும் உண்டு)

இங்கு பத்ரகாளியின் சாந்நித்யம் உண்டு. இங்கு தேவிக்கு குங்குமார்ச்சனை நடத்தி குருதி படைக்கும் வழக்கமும் உண்டு. இப்போது நல்லதொரு கோவிலும் அமைந்துள்ளது.

இங்கிருந்து ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் நடந்து கொண்டே இருந்தால் அடையுமிடம் கரிவலம் தோடு.
9. கரிவலம் தோடு

கரி என்றால் யானை. யானைகள் தண்ணீர் அருந்த வலம் வரும் பகுதியே கரிவலம் தோடு. புதுச்சேரி ஆற்றைக் கடந்து அடையும் இடம்.

இது சற்றே இளைப்பாறுவதற்க்குரிய இடம் மட்டுமேயன்றி தங்குவதற்குரிய இடம் அல்ல.

பயமுறுத்தும் கரிமலைக்கு கொஞ்சம் தயார் படுத்திக் கொள்ள உதவுமிடம் இது.

பண்டைய குருமார்கள் யாரும் கரிவலந்தோட்டில் இரவு நேரம் தங்க அனுமதிப்பதில்லை. (இன்று பலரும் அங்கே தாவளம் போடுகிறார்கள்; அது சரியல்ல)

10. கரிமலை

யானைகளின் சரணாலயமாக அறியப்படுவது கரிமலை; கரிமலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்திலுள்ள கணபதிக்கல்லை வணங்கிச் செல்லுதல் வேண்டும். கரிமலையின் அதிஷ்டான தேவதை பகவதியாதலால் அடிவாரத்திலேயே வனமஹாகாளியின் சாந்நித்யமும் உள்ளதாக கூறப்படுவதுண்டு. சிலர் ஒரு குறிப்பிட்ட கல்லில் காளி ஸஹஸ்ரநாமத்தால் ஆராதிப்பதும் உண்டு.

நெடுங்குத்தாக நிற்கும் கரிமலை ஏழு அடுக்குகளைக் கொண்டது. பக்தர்களின் விரத பலத்தையும் ப்ரம்மச்சர்ய பலத்தையும் சோதிக்கும் இடம் கரிமலை என்று நம்பப்படுகிறது. மேலும் அவரவர் மனத்தின் உண்மைகளை வெளிக்கொணரும் இடமாகவும் இது இருப்பது கண்கூடு. மேலும் இது ஸத்ய பீடமாதலால் அனாவசியமான பேச்சுக்களையோ சண்டை சச்சரவுகளையோ அடியோடு தவிர்க்க வேண்டும். கரிமலை உச்சியில் வைத்து சொல்லும் ஒவ்வொன்றும் சத்தியமாகும். இங்கே அவரவர் குருமார்களை வணங்கி நல்வாக்குகளை ஆசிகளாக பெற்று உய்யுதல் நலம்.

கரிமலை நாதனையும் வணங்கி நாழிக்கிணற்று நீரைப் பருகி சற்றே இளைப்பாறி கரிமலை இறங்க வேண்டும்.

கரிமலை ஏற்றமும் இறக்கமும் ஒரு மனிதனை ஸ்புடம் போடக்கூடிய தன்மை கொண்டது. அதுவரை சரணம் கூப்பிடாதவனையும் சரணம் சொல்ல வைக்கும் வல்லமை அதற்கு உண்டு. முறையாக விரதம் இருந்து கரிமலை ஏறி இறங்குபவனிடம் பகவான் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அவனது துன்பத்தைத் துடைத்துச் செல்கிறான் என்பது பண்டைய பக்தர்களின் அனுபவம்.

11, 12, 13. வலியானை வட்டம், செறியானை வட்டம் - பம்பை

பம்பை என்று இன்று குறிப்பிடப்படும் பகுதி உண்மையான பம்பையல்ல ! இதுவும் பம்பையாறுதான் என்றாலும், வண்டிகள் மிகவும் பெருகிய  பிற்காலத்தில் உருவானதுதான் இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம் அமைந்துள்ள பம்பைப்பகுதி. பண்டைய காலத்தில் வெலியானைவட்டத்தையொட்டி அமைந்துள்ள பகுதியே பம்பை.

கரிமலை உச்சி தொடங்கி பம்பை வரை கருப்பனின் சாந்நித்யம் உள்ளதென்பது பல பக்தர்களின் அனுபவம். அதனால் வலியானை வட்டத்தில் தேங்காயில் கருப்பனை ஆவாஹித்து பூஜிக்கும்  வழக்கமும் உண்டு.

கரிமலையின் இறக்கத்தின் முடிவே வலியானைவட்டம். இங்கிருக்கும் பம்பை தேவகங்கைக்கு ஸமமானது.

பகவானின் காலடி பட்ட இந்த புண்ணியபூமிக்கு நிகராக உலகில் வேறெங்கும் காணமுடியாது என்பது ஸத்தியம். பகவான் சாஸ்தாவின் வரவுக்காக சனகாதி ரிஷிகள் தவமியற்றிக் காத்திருந்த இடம். இன்றும் பலப்பல மஹான்களும், ஞானிகளும் கண்ணுக்குத் தெரியாமல் தவம் செய்யும் இடம் இந்த வலியானைவட்டம்.  இந்த காரணத்தால்தான் பல குருமார்கள் இங்கு தங்கி பூஜைகள், ஹோமங்கள், அன்னதானங்கள், பம்பா ஸத்தி, பம்பா விளக்கு என என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்தார்கள்.

பூதப்பாண்டியாரின் ஆழியும், புனலூர் ஸுப்ரமண்ய ஐயரின் தீவுத் திடலும், நீலகண்ட ஐயரின் மரமும், ஸமூக சாஸ்தா ப்ரீதியும் வலியானைவட்டத்தில் இன்றளவும் பேசப்படுகின்றன.

இங்கு நடத்தப்படும் அன்னதானத்தில் ஐயப்பனே நேரடியாக ஏதாவது ஒரு உருவத்தில் வந்து பங்கு கொள்கிறான் என்ற காரணத்தால், இங்கு அன்னதானத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

இங்கே எந்த விரிக்கு யார் வந்தாலும் ஐயப்பனே வந்ததாகக் கருதி அன்னதானம் செய்ய வேண்டும். (முன்பெல்லாம் 108 விரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் அடுப்புச் சாம்பலை சேகரித்து பிரசாதமாக கொண்டு வரும் வழக்கம் இருந்தது)

இங்கே ஸ்னானம் செய்து அனுஷ்டானங்களை முடித்து குருவுக்கு தக்ஷிணை தந்து வணங்கி கட்டெடுத்து யாத்திரையை தொடர வேண்டும்.

பின்னர் சபரி பீடத்தில் அம்பிகையையும், ஐயப்பனையும் வணங்கி, விரதத்தில் ஏதும் குறைகள் இருப்பின் மன்னிக்கும்படி ஸமஸ்தாபராதம் கேட்டு சரங்குத்தியை வணங்கி பதினெட்டாம்படியை அடைய வேண்டும். கடுத்தனௌயும் கருப்பனையும் வண்ங்கி உத்தரவு பெற்று, தேங்காய் உடைத்து ஸத்யமான பதினெண்படிகளில் ஏறுதல் வேண்டும்.

பகவானின் தரிசனம் கண்டு, நெய்யபிஷேகம் முடித்த பின்னர், மீண்டும் குருவுக்கு தக்ஷிணை தந்து அவர் கையால் அந்த பிரசாதத்தை பெறுதல் வேண்டும். பிரசாதத்தை இருமுடியில் வைத்து இருமுடியை சுமந்தபடி கீழே இறங்க வேண்டும்.

முத்ரை மாலையை எக்காரணம் கொண்டும் வழியிலேயே கழற்றலாகாது; பிரசாதங்களை வீட்டில் கொண்டு வைத்து, தீபாராதனை செய்து, மாலையிட்ட குருநாதரை வணங்கி மாலையை அவர் மூலமாகவே கழற்றி, பிரசாதங்களை தானும் ஸ்வீகரித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

ஐயப்பனின் யாத்திரையில் நியமங்களும் கட்டுப்பாடுகளும் மிகவும் முக்கியம். முறையான சடங்குகளும் ஸம்ப்ரதாயங்களும் நம் பெரியோர் உருவாக்கித் தந்துள்ளார்கள்.

என் குருநாதர்களிடமும், பெரியோர்களிடமும் கற்றறிந்ததை எடுத்துரைத்தேன்... இதை எவ்வளவும் சிரத்தையுடன் முடியுமோ அவ்வளவு நம் சக்திக்கு உட்பட்டு கடைபிடிப்போமாயின் ஐயன் ஐயப்பனின் பேரருள் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை !

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !

Friday, September 1, 2017

Life in Chennai

Chennai is very special for me. I am brought up here in Chennai. Schools and Colleges are plenty. Wherever i studied, i loved the environment.

I live in South Chennai. Its a peaceful life. During birthday of Kamal Haasan At 12am me and my friend used to go to airport and surrounded area for supervising the person pasting posters on behalf of Kamal Haasan Welfare Movement. Under which we do blood donation, organ donation, charity, feeding poor people and more charity. And yes, I am proud to be a fan of him. He is more than a film artist. We call him Alwarpet Almighty (Alwarpettai Andavar in tamil)

Cinema theaters- Vetrivel (nanganallur), Devi (Mount Road), Sathyam (Royapettah), S2Thyagaraja(Thiruvanmiyur), Escape (Express Avenue), Abirami (Purasaiwakkam), Vetri (Chrompet), Kamala (Vadapalani), Ega (Chetpet), Prarthana Drive-in(Injambakkam, ECR), Mayajaal (ECR), INOX (Mylapore), PVR , LUXE (Velachery)—- are my favorite theaters. Sathyam is best for its good sound effects and mainly the seats for sitting.

Bad luck in Chennai is TRAFFIC. You cant reach your destination that easily even the distance is as less as it can be. My favorite locations are Besant Nagar Beach (Elliots Beach or Bessy Beach), Marina Beach, Adyar, Nanganallur, Mount Road & Parrys- where i wander to buy accessories for anything, Foreshore Estate (ha.. its a heaven for me. as i studied,worked and grown up in and around adyar.) Lot of hangout spots available between marina and adyar, which includes KFC, Coffee Day, Hot Breads, Subway and many spots for chit-chat. Though there are much more relaxing locations in chennai, nothing matches the seashore areas like Bessy, Thiruvanmiyur and Marina.


Its tough to live in Chennai if you don’t own a house. OMG! Rent for houses are higher. For example, there are bigger independent house in Southern part of Tamil Nadu like Thanjavur, Trichy, Kumbakonam districts for a rent of Rs.6000/- per month where as in Chennai u have to pay minimum Rs.6000/- for a single bed room apartment.

Real Estate- Lots of efficient flat promoters available. Owning a house/apartment in areas like Anna Nagar, Adyar, Alwarpet, Mylapore, Nanganallur and surrounded locations adds prestige to the owners. Those who have invested in 1990s are seeing a greater profit margin.

There are some places in chennai where you have to be alert any time; those places include mainly North Chennai. And yes, crimes do occur everywhere. But most of the cause has a North Madras origin. It is the oldest part of the city. Also when you go to Chindadripet/Pudhupettai, be careful about your vehicle. Theives will easily dismantle the automobile parts and loot yours.

There are more about Chennai life. For now i have shared some important facts and happenings in Chennai. Have a Nice Day dears !!

Monday, January 19, 2015

நற்பணி இயக்க அய்யாவுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் !!






2011/13 போலவே 2014-லும் ஒரு மாபெரும் திருவிழாவாக, முடிந்தால் 2011-ஐ விட பெரிய "மருதநாயக ட்ரைளர்" போல பெரிய பெரிய விஸ்வரூபம்ங்களாக தவமாய் காத்திருக்கும் சின்ன சின்ன சண்டியர்களுக்கு அன்பு புரிந்து, மாபெரும் சபையில் அவர்களுக்கு மருதநாயகத்தின் புகைப்படங்களை அன்பளிப்பாக சிறப்பிப்பாய்...

அனைத்து மாவட்ட செயல் வீரர்களுக்கு உனது செல்ல புண் சிரிப்பை காணவே இமயம் முதல் இலங்கை வரை நாங்க இத்தினி கை இருக்கோம் !! மீண்டு வா தலைவா.... மீண்டும் மீண்டும் வருக 30 நிமிட Trailer-இல் மறைந்திருக்கும் மருதநாயகமே !!! ஏழைகளின் துயரம் துடைக்கும் விஸ்வரூபமே !! 












என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் யாதெனில், உத்தமவில்லனை மார்ச் 20க்கு பிறகு அல்லது ஏப்ரல் 2015-இல் வெளியிட்டால், நானும் எனது தலையாய தொழிற் கடமைகளை முடித்துவிட்டு, எங்கள் உத்தமரை உத்தமவில்லனாய் காண பயிற்சி முடிந்து, திருச்சியிலிருந்து மதுரை சென்று, கோவை, தூத்துக்குடி, சிவகாசி போன்ற இடங்களுக்கு "எனது சகாக்களுடன் 2014 கமல் ஹாசன் நற்பணி இயக்க சுற்றுலா" போல், 2015 லும் இனிதே கண்டு ரசிப்பேன் எங்கள் ஆருயிர் அன்பனை, புன்னகைகளை நிராகரிக்காத விருமாண்டி அண்ணனை !!





மேலே காணும் நபரில் ஒருவர் இயற் பெயர் "மருதநாயகம்", அவர் 2010-இல் "சண்டியர்" கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தில் செயல் வீரர் திரு.பாலாஜி நாராயணன் அவர்களால் ஆலந்தூரில்  பணிக்கப்பட்டார் 

!! HAPPY KAMAL YEAR 2015 !!

Wednesday, December 31, 2014

பாலச்சந்தர் அய்யா+கமல் ஹாசன் உண்டாக்கிய திரைக்காவியங்கள் பல...

                            பாலச்சந்தர் அய்யாவை பற்றி பதிய வேண்டும் என்று பகிர தெரியாமல், திக்கு தெரியாமல் தடுமாறி தடம் மாறாமல் உள்ளேன் சார்... துக்கம் தாங்காமல் நீங்கள் இருக்க, உங்கள் சார்பாக நானும் எனது ஆருயிர் தோழர் ஆறுமுகமும் 23.12.2014 இரவு 10.10 மணிக்கு சென்று விட்டு, விநாயகர் ஆலயத்தில் உள்ள இரங்கல் செய்தியை மட்டும் புகைப்படம் எடுத்து, அதை முகநூலில் பதிந்தோம் அய்யா..





                                    அகவை குறைவு என்றாலும்; நிழல் நிஜமாகிறது, மன்மத லீலை (2007-இல் கண்டேன் கண்ணனை), நினைத்தாலே இனிக்கும்(அக்டோபர் 2013- வுட்லண்ட்ஸ் திரையரங்கில் ரசிகர்களோடு), தில்லுமுல்லு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, இன்னும் சரித்திரத்தில்   இடம்பெற்று சில்வர் ஜுபிலி கொண்டாட்டத்தை காணாத (அன்பே சிவம் போல) பாலச்சந்தர் அய்யா+கமல் ஹாசன் உண்டாக்கிய திரைக்காவியங்கள் பல...

                                 இத்துடன் எனது புத்தாண்டு வாழ்த்தினையும் பணிவன்போடு தெரிவித்து, விஸ்வரூப விசாம் அஹ்மத் கஷ்மீரியின் புகழ் "விரைந்து வாகை சூட வா" என்று மனிதநேயமிக்க மாந்தர்களை வணங்கும் இயக்கத்தில்- தாழ்த்தப்பட்ட உள்ளம்:- அடியேன் "சின்ன சண்டியர்" கௌரிசங்கர். அன்பே சண்டியர் ! பண்பே விசாம் ! துணிவே சத்யா !!

Saturday, December 27, 2014

பஞ்சதந்திர நண்பர்களுக்கு முதற்கண் நன்றி !!

 எனக்கும் டி-ஷர்ட் வாங்கி கொடுத்து உதவிய எனது
பஞ்சதந்திர நண்பர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்ததோடு,
நீங்கள் நால்வரும் வாழ்வாங்கு வாழ்ந்து,
பொழுதும் கமல் அவர்களுக்கு நற்பணி இயக்கம் மூலம் மட்டுமே உங்கள் சேவையை தொடர்ந்து,
பல லட்சம் செலவில் நற்பணி செய்து,
இன்னும் பல மகுடங்களை சூட வாழ்த்தும்---
உங்களைப்போல் ஒருவன் !!
-Limp Bizkit "Shango ஹாசன்"

உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒரு பொழுது உன்னை கைவிடுமே..

பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள்கொடிகள் அறுபடுமே..
மண்ணை நம்பும் மாமரம் ஓர் நாள் மாபெரும் புயலில் வேர் அறுமே...
உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒரு பொழுது உன்னை கைவிடுமே..
இது பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பிண நாள் வரையில் பின் வருமா??



ஏய்.. சிற்பமான பெண்டிர் என்று தேடி ஓடும் மானிடா,
அற்பமான மாதரோடு ஆசை கொள்வதேனடா??
கற்பு ஒன்றிருக்குதோ, காவல் ஒன்றிருக்குதோ,
கர்பமேறு பையினோடு கவசமிட்டிருக்குதோ??
கர்பமேறு பையினோடு கவசமிட்டிருக்குதோ??

யாருக்கும் அர்ச்சகரும் இல்லை, அரசனும் இல்லை!!!


Post By Gopalakrishnan Gowrishankar in FB-
Yesterday(26.12.2014) at 04:53 · :-

ஒருவரின் வாய்மொழி என்னை மீள முடியாத பள்ளத்தாக்கில் தள்ளப்பார்த்ததால், அதை நான் இப்பொழுது உணர்ந்ததால் இப்பதிவை இனிதே பதிவு செய்கிறேன்... நம்மவர் போல் நான் யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அர்ச்சகரும் இல்லை அரசனும் இல்லை... கமல் ஹாசன் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருப்பேன். I am sorry if i have hurt anybody's sentiments for posting unwanted messages on 23rd and 24th Dec 2014.
Kindly forgive me seniors and juniors !!

I will apologize for the mistakes that I have done without any expectations from anyone.