வணக்கம் தோழர்களே. ஒரு பணிவான வேண்டுகோளை உங்களிடத்தில் சமர்ப்பிக்கும் தருவாயில் சிவகாசியில் உள்ள கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளை உங்களுக்கு தெரிவிக்க கடமைப்படவில்லை; ஏன் என்றால் அது தெரிந்து வைத்திருக்க வேண்டியது உங்கள் முதற்கண் கடமை... கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்ந்தவர்கள் மற்றும் கமல் அவர்களின் நேசம் மிக்க உயிர் ரசிகர்கள் யாவரும் ரஜினி அவர்களை பொழுதுபோக்குக்காக திட்டுவதற்கு எங்கேயும் எப்போதும் மிகையான அனுமதி கிடைக்காமல் இருக்கவே நான் ஒரு சிறு முயற்சி எடுத்துள்ளேன்...
ரஜினி அவர்களின் வளர்ச்சியை தடுப்பவர்கள் கண்டிப்பாக நாம் கிடையாது. அந்த வேலையை அவர்கள் ரசிகர்களே பார்த்து கொள்வார்கள். ஏன் என்றால் "ஓடும் படம் ஓடவில்லை, ஓடாத படம் ஓடியது" தான் சூப்பர் ஸ்டார் அவர்களின் நிலைமையும். வள்ளி, பாபா, கோச்சடையான் இன்று லிங்கா... நமது விமர்சனம் கூட நிதர்சனத்தோடு தெரிவிக்க கமல் அவர்களின் ரசிகர்கள் என்றென்றும் கட்டுப்பட்டுள்ளோம்...
காடுகள் தாண்டி கடக்கின்ற போதும் நம்மவர் துவக்கிய நற்பணி இயக்கத்திற்கு காயம் இல்லை.. தயவு செய்து ரஜினி அவர்களின் செயல்பாடுகளை பகுத்தறிந்து, தெளிவாக, பொறுமையாக எடுத்துரைத்து அந்த மனிதநேயமிக்கவரை சிறந்த கமல் ரசிகராக அடையாளம் காட்டுவோம்...
இது கட்டளை அல்ல... ரஜினி அவர்களை இகழ்ந்து பேசுபவர்கள் கமல் ரசிகர்கள் கிடையாது என்ற சரித்திரத்தை படைப்பது தான், நமது விஸ்வரூப தடைகளுக்கு அன்பு கலந்த மருந்து... தயவு கூர்ந்து மட்டமான விமர்சனத்தை நமது தோட்டத்தில் விதைக்க வேண்டாம் என்று சகோதரர்களின் பாதம் வணங்கி வேண்டுகிறேன்...
என்னை உருவாக்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... வணக்கங்கள்...
இங்ஙனம்,
"கமல் பக்தர்களின் உன்னத பக்தன்" சின்ன சண்டியர் கௌரிசங்கர்
No comments:
Post a Comment