சட்டத்தை கையாளுபவர்களுக்கு யார் சட்டத்தை மீறினாலும், அவர் தன் ஆணவத்தில் அதிகாரத்தில் கை வைத்தால் தண்டனை நிச்சயம்.. இந்த திரைப்படம் முடியும் தருவாயில் அந்த "common man" க்கு குறைந்த பட்ச தண்டனை வழங்காததன் காரணம்: அவர் கோவத்தில் அர்த்தம் உள்ளதால் மட்டும் அல்ல... இன்று ஒரு சராசரி மனிதனுக்கு கோவம் வந்தால் "வாசகர்கள் கடிதம்" போன்ற எல்லையோடு பொய்ப்புரை செய்யும் பத்திரிகைகளில் தன் கோவத்தை வெளிபடுத்துவது தான்... வாதத்தை மெழுகேத்தும் ஒவ்வொரு வாசகரும் வாதிகள் தான்... ஒரு சராசரி மனிதன் தீவிரவாதி ஆகிவிட கூடாது என்பதற்காகவே இத்திரைப்படம் சமர்ப்பணம்...
தன் பெயர் அப்பத்திரிக்கையில் அச்சிடப்பட்டது என்று தற்பெருமை பேசும் ஜாம்பவான்கள் இருக்கும் வரைக்கும்; மேலும் அவர்கள் பேசுவதில் ஞயாயம் இருப்பதை கண்டு அவர்களுக்கு பாராட்டுகள் கொடுத்து மேலும் அவர்களுக்கு போலி கௌரவம் கொடுப்பதும், இந்நாட்டில் வெகு விமர்சையாக அரங்கேறுகிறது... "தனது செயல் சரி" என்ற ஆணவத்தில் "நான் தான் அப்டி செய்தேன்.. என்னை போல் உன்னால் செய்ய முடியாது" என்று மார்தட்டுபவர்கள் எத்தனை "Acheivement Award" வாங்கினாலும் அவை செல்லா காசு தான்... செல்வத்தால் ஏற்படும் செல்வாக்கை விட, அன்பினால் விஸ்வரூபமெடுக்கும் பரிவிற்கு சக்தி அதிகம்..
செல்வத்தாலும் கல்வியினாலும் கிடைக்கும் கௌரவத்தை விட, தன்னடக்கதோடும் துணிவுடன் செயல்படும் மாறா அன்பின் வெளிப்பாடு தான் சுயநலமற்ற வாழ்க்கை... இன்று யாதொரு மனிதனும் கல்விக்கு கொடுக்கும் மரியாதை, அக்கல்வியினால் தான் உயர்வதற்காகவே தவிர கல்வியில் கற்ப்பித்ததை தன்னோடு வைத்துக்கொள்ளாமல் முடிந்த வரை கல்லாதோருக்கு எடுத்துரைத்து, உற்றாரின் செவிக்கு கொண்டு செல்வோம் என்று எண்ணாமல் போனதால் தான் இன்று கல்வி வியாபாரமானது... மருத்துவமும் அவ்வகை தான், பெரிய வித்தியாசம் இல்லை... மருத்துவத்தின் பிறப்பிடம், கல்வியின் இருப்பிடம்...
அன்பினால் சுயரூபம் வெளிப்படட்டும்.. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை பற்றி புரிந்துகொண்டு, உற்றாருக்கும் எடுத்துரைத்து; தன்னடக்கதோடும், துணிவோடும் செயல்படும் நம்மவர் "உலகநாயகன்" கமல் ஹாசன் அவர்கள் அனைவர் மீது பொழியும் அன்பை பூசிப்போம், கமல் எங்கள் மூச்சு என்று சுவாசிப்போம் !! வாழ்க பாரதம் ! அன்பே சிவம் !!
1 comment:
Awesome Shango.. Keep writing.. arumai arpudham attagaasam...
Post a Comment