"" காசுவாங்கிக் கொண்டு கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்த விஜய்க்கு விவசாயிகள் பிரச்சனை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறதென்று பரவலாக ஸ்டேடசுகளை பார்க்க முடிகிறது. அவரு சொல்லித்தான் கொக்கொ கோலா வாங்கி குடிச்சீங்கன்னா , இன்னக்கி அவரு விவசாயம் பார்க்க சொல்றாருன்னா போயி வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு நிலத்துல இறங்கி விவசாயம் பாக்க வேண்டியது தானே !
அடப்பாவிகளா !
மக்களுக்காக உழைக்கிறேன் . இதுதான் என் கொள்கை . இதுதான் என் கட்சியின் கொள்கை என்றெல்லாம் சொல்லி , காலில் விழுந்து வாக்கு கேட்டு ,வாக்குறுதி கொடுத்து ,தேர்தலில் நின்று ,வென்று ,ஆட்சியில் அமர்ந்ததும் , கொள்கைக்கு எதிராகவும், வாக்களித்த மக்களுக்கு எதிராகவும் , இதுவரை ஆண்டவர்களும் இப்போது ஆள்கிறவர்களும் ஆட்சி புரியும் போது ,
"எங்களை ஏன் நம்பவைத்து ஏமாற்றினாய் ?, எங்கே போனது நீ சொன்ன கொள்கை" என்றெல்லாம் கேள்வி கேட்காதவர்கள் இன்றைக்கு விஜயைப் பார்த்து இவ்வளவு ஆவேசமாக கேள்வி கேட்பது ஏன் என்றே புரியவில்லை .
வாக்குறுதி தந்து ஏமாற்றியவனை விட்டுவிட்டு பணத்திற்கு நடிக்கும் வியாபாரியிடம் நீங்கள் மொத்தமாக பாய்வது ஏன் ?
அப்படி விஜய் சொன்னால்தான் கேட்பீர்கள் என்றால் , தமிழன் படத்தில் அவர் சட்டம் படிக்க சொன்னார்,நீங்கள் சட்டம் படித்தீர்களா இல்லை, கில்லி படத்தில் அவர் கபடி விளையாண்டார் என்பதால் கிரிக்கெட்டை விட்டுவிட்டு கபடியை வளர்த்தீர்களா ?
விஜய் ,முருகதாஸ் எல்லாம் மக்கள் தலைவர்கள் இல்லை! அவர்கள் காசு தேடும் வியாபாரிகள் !
நியாயமாய் நம்முடைய கோபம் கொக்கோ கோலாவை இங்கு அனுமதித்தவர்கள் மீதும், இங்கிருந்த ஆயிரக்கணக்கான சோடா கம்பெனிகளை அழித்தவர்கள மீதும் , தாமிரபரணியை அன்றைக்கு சுரண்ட அனுமதித்தவர்கள் மீதும் , இப்போது விவசாய நிலங்களை கூறு போட்டு விற்பவர்கள் மீதும் வந்திருக்க வேண்டும்.
இந்த நாட்டின் மிகப் பெரிய காமெடி என்னவென்றால் , தேசத் தலைவர்கள் எல்லாம் வண்ண வண்ண ஆடைகளில், தினம்தினம் மேடைகளில் , பக்கம் பக்கமாய் வசனம் பேசி, Event mangement ஆட்களோடு ஒப்பந்தமிட்டு, கதாநாயகர்கள் போல வசனம் பேசி நடித்து வருகிறார்கள் .
வாக்களித்த நீங்களோ தன் தலைவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் சினிமா கதாநாயகர்களிடம் கேட்கிறீர்கள். நியாயமாய் உங்கள் முதல் கோபம் யார் மீது வந்திருக்க வேண்டும் ? ""
The above post was shared in fb few days ago. VJ is not a brainy person to avoid such advertisemens. He acted for money. We should never care about who delivers the truth. Because most of the truth are said by persons who did wrong some day. If people who did wrong accepts their mistake openly but immediately, they are normal persons. If they hides the truth and argue on why they did wrong, they are average persons. Once a bunch of people keeps doing wrong with fake publicity hiding the truth and fools people like us, they are political persons. Once the above persons realize their mistakes, feel how wrongly they did and starts learning from mistakes, they are turning rational and becoming a human being.
For being Human one never need to sacrifice themselves. They just have to sacrifice their wrong aspirations. Being human is difficult these days. Everybody is turning selfish when they think how to get relieved from their mistake/sin and yet they get relieved by doing another mistake/sin. People are forgiven, but the mistakes/sins are not. So, stay peace. Try to tag the bunch of people who dragged coke/pepsi into our country.. Not just the person who acted in ads for money. But today, if you try to analyze the origin of these cola companies in India, you will find more culprits than vijay or anybody.

No comments:
Post a Comment