Thursday, June 4, 2009

நடிகர் கமல் ஹாசரின் திருப்புமுனை

ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களை இன்று நடிகன் என்றே கூற முடியாது, காரணம் - அவர்கள் ஏற்கின்ற கதாபாத்திரங்கள். ஒரு நாடக தலைவன் போலவே காட்சி தருகின்றமையால் அவர்கள் நடிப்பை வெளிபடுத்துவது மிகவும் சொற்பமான காட்சிகளில். இவர்களை போன்றவர்கள் கலைத்துறை ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்கள். குத்து சண்டையில்(WWE) தனக்கு பிடித்த வீரன் தனது எதிரியை எப்படி (ரசிகர்களை கவர்ந்து) வீழ்த்துகிறான் என்று போலித்தனமான வீரத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது. அவர்கள் நடிப்பை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. ஆறு பாடல்கள், நடனங்கள், நகைச்சுவை காட்சிகள், 3 சண்டைகள் என வியாபாரத்திற்காக நடிப்பவர்கள். நாகேஷ், நசுரிடின் ஷா, சிவாஜி கணேசன்; இவர்கள் எல்லாம் நடிகர்கள். அனால், மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் போல் அல்ல. இவர்களின் நடிப்பு, குழந்தைகளை கவர்வதில்லை. கமல் ஹாசன் அவர்கள் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மூன்றாம் பிறையில் அவரின் நடிப்பிற்கு தேசிய விருது வழங்க பட்டது.

No comments: